Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கொப்பரை தேங்காய் ரூ.19 லட்சத்துக்கு ஏலம்

கொப்பரை தேங்காய் ரூ.19 லட்சத்துக்கு ஏலம்
மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏலத்துக்காக வைக்கப்பட்டிருந்த தேங்காய் கொப்பரை.

கொப்பரை ஏலத்தில் 100 விவசாயிகள் 279 மூட்டைகளில் கொண்டு வந்திருந்த 10,629 கிலோ ஏலம் விடப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற ஏலத்தில் தேங்காய், கொப்பரை, தேங்காய் மூடி ஆகியவை மொத்தம் ரூ.18.87 லட்சத்துக்கு விற்பனையாகின.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 18 விவசாயிகள் 4,500 தேங்காய் கொண்டு வந்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.90,973. ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூ.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.36-க்கும், சராசரியாக ரூ.45-க்கும் விற்பனையானது.


கொப்பரை ஏலத்தில் 100 விவசாயிகள் 279 மூட்டைகளில் கொண்டு வந்திருந்த 10,629 கிலோ ஏலம் விடப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.16,15,388. முதல் தர கொப்பரை ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.161-க்கும், குறைந்தபட்சமாக ரூ.140-க்கும், சராசரியாக ரூ.155-க்கும் விற்பனையானது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ.130-க்கும், குறைந்தபட்சமாக ரூ.116-க்கும், சராசரியாக ரூ.125-க்கும் விற்பனையானது.

தேங்காய் மூடி ஏலத்தில் 32 விவசாயிகள் 276 மூட்டைகளில் கொண்டுவந்திருந்த 6,378 கிலோ விற்பனைக்கு வந்தது. ஒரு கிலோ ரூ.28.39-க்கு விற்பனையானது. இதன் மொத்த மதிப்பு ரூ.1,81,073 ஆகும்.

முந்தைய செய்தி
லலிதா ஜூவல்லரி நகைக் கடை இடமாற்றம்
அடுத்த செய்தி
Goyal calls for closer economic ties with Andaman and Nicobar

தொடர்புடைய செய்திகள்